• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வைகை அணையில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது இதனால் வைகை அணை பாசன பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. அதன் பின்பு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 68.50 வழியாக உயர்ந்ததையடுத்து அணையிலிருந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்ததால் இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்து முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றங் கரையோரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், ஆற்றை கடக்கவும் குளிக்கவும் கூடாது என்றும் பொதுப்பணித்துறை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.