• Thu. Apr 25th, 2024

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

Byதரணி

Oct 17, 2022

அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் காளிமுத்துநகர், தேவர்சிலை, சிவகாசியில் பராசக்திகாலனி, பழைய விருதுநகர் ரோடு, சிவகாசி கிழக்கு ஒன்றியத்தில் விஸ்வநத்தம், சிவகாசி வடக்கு ஒன்றியம் சார்பாக ஆனைக்குட்டம், சிவகாசி மேற்கு ஒன்றியம் சார்பாக கங்காகுளம் ஆகிய பகுதிகளில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடிஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார். சாம்(எ)அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், புதுப்பட்டி கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்ட கழக அவை தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் , விருதுநகர் நகரச் செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் தகவல் தொழில் நுட்ப அணி நகரச் செயலாளர் பாசறை சரவணன்,ஒன்றிய செயலாளர்கள் தர்மா, கண்ணன், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், சிவகாசி முன்னாள் நகர கழக செயலாளர் அசன்பதூருதீன், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், மகளிர் அணி பிரியா, காமாட்சி, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் முருகேசன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *