• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் 51 ஆண்டு விழாவை கொண்டாடினார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ,ஓபிஎஸ் அணியினர் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

விழாவை முன்னிட்டு பொதுக்குழு உறுப்பினர் சேட் .அருணாசலம் அவர்கள் தலைமையிலும் ,நிர்வாகிகள் இளையராஜா, சின்ன ராஜா ,எம்.பி. பழனி ஆகியோர் முன்னிலையில் வைகை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .தொடர்ந்து சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் ,ஜெயலலிதா படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் சிறப்பு அழைப்பாளராக தேனி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜதானி பாண்டி, தொழில்நுட்பக் குழு முத்துக்குமார், வேல்முருகன், தெப்பம் மருது, ராமச்சந்திரன், சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.