• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு..!

ByA.Tamilselvan

Jul 16, 2022

பாகிஸ்தானில் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இலங்கையை போல பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. வேறு வழியின்றி அங்கு பெட்ரோல் – டீசல் விலை உயர்வை அமல்படுத்தியது.ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் இருந்த பொதுமக்களை இது கடுமையாக பாதித்தது .
இந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால்பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.54 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, பாகிஸ்தான் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பேசிய ஷாபாஸ் ஷெரீப், “ஆட்சிக்கு வந்ததும், எண்ணெய் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.