• Sat. Oct 12th, 2024

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

ByKalamegam Viswanathan

May 19, 2023

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருந்து (மெடிக்கல்) கடைக்கு அருகில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
மதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் அதே பகுதியில் மருந்து கடை ராஜா (மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இன்று மதியம் திடீரென இரண்டு சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.பெட்ரோல் குண்டு வீச்சில் கடை அருகே குடம் தீப்பற்றி எரிந்தது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எதற்காக இந்த இரண்டு சிறுவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரையில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது, மண்ணெய் குண்டு, பெட்ரோல் குண்டு வீசி பயமுறுத்துவது அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்குவார்களா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *