மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சரியாக போடவில்லை என மறியல் செய்த முதியவரால் பரபரப்பு
மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் விரிவாக்க பகுதிகளில் தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை மட்டும் குடிநீர் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் மதுரை 67 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான டிவிஎஸ் நகரையடுத்த லட்சுமி நகர் பகுதிகளில் இன்று காலை தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது இந்த நிலையில் அங்கு வசித்து வரும் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்ட முதியவர் வெங்கடகிருஷ்ணன் திடீரென பணியாளர்களை தடுத்து நிறுத்தி அதே தார் சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த உதவி பொறியாளர் முருகன், போலீசார், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் குவிந்தனர்.மறியலில் ஈடுபட்ட முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரியாக தார்சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கொடுத்ததை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாநகராட்சி பகுதிகளில் இது போன்று பொது பணிகள் அரசால் நடைபெறும் போது இந்த முதியவர் போன்று ஒவ்வொரும் செயல்பட்டால் தரமான பணிகளை செய்ய வைக்கலாம் என அப்பகுதியில் சிலர் முனு முனுத்தனர்.