• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தாசில்தார் மிரட்டுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கொடுமுடி தாசில்தார் மிரட்டுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கொடுமுடி அருகேயுள்ள புஞ்சைகிளாம்பாடி கிராமமக்கள் கலெக்டரிம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது…
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புஞ்சை கிளாம்பாடி கிராமத்தில் வி.வி.ஸ்னாக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஆபத்தான முறையிலும், சுகாதாரமற்ற முறையிலும் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மனு கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்ற கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி புகார் கொடுத்த மணி என்பவரை என்னிடம் தெரிவிக்காமல் நீங்கள் எதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தீர்கள். அந்த தொழிற்சாலையால் உங்களுக்கு பாதிப்பு என்றால் நீங்கள் வீடு மாறி பேய்விடலாம் என ஒருமையில் பேசி பேசி மிரட்டி உள்ளார்.ஆகவே கலெக்டர் உரிய விசாரணை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.