• Tue. Mar 21st, 2023

கண்மாய் ஏலத்தை ரத்துசெய்யக்கோரி கலெக்டரிடம் மனு

ByA.Tamilselvan

Apr 18, 2022

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக கண்மாய் ஏலத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவியூர் ஒன்றியத்தில் கீழக்கண்மாய்,மேலக்கண்மாய் என இரண்டு கண்மாய்கள் உள்ளன. இரண்டு கண்மாய்களும் தற்போது நீர் நிரம்பி உள்ளன. மேற்படி கண்மாய்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டது.கடிதம் மூலமாக மட்டுமே தகவல் தெரிவித்துவிட்டு கிராமபஞ்சாயத்தின் தீர்மானம் இல்லாமல் ஏலம் எடுத்துள்ளனர்.
இது கிராமமக்களிடையே பெரும் பிரச்சனையாக உருவானது .ஆவியூர் ஊராட்சி மன்ற தலைவர் ர. தனலெட்சுமி ரவி தலைமையில் கிராமபொதுக்கூட்டம் போடப்பட்டு மீன்பிடிக்க விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்யும் படி கலெக்டரின் மனுகொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர் ,மற்றும் மாவட்ட காவல் கண்காணிபாளர்,மாவட்ட பொதுப்பணித்துறை ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனுகொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *