• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மீனவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு

கடற்கொள்ளையர்களிடம் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை பாதுகாக்ககோரி தெற்காசிய மீனவர் கூட்டமைப்பினர் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையிலிருந்து சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் சரமாரி துப்பாக்கி சூடுநடத்தினார்.

இதில் . ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்னும் மீனவர் மீது குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருவதால்மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.மீனவர்களை கடற்கொள்ளையிடம் இருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசை வலியுறுத்தி தெற்காசிய மீனவர் கூட்டமைப்பினர் இன்று கலெக்டரி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.