தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கடந்த 2025 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. WP(MD):30766/2025 அதில் புதுக்கோட்டையில் அரசு மதுபானக்கடைகளை முறைப்படுத்துதல் தொடர்பாகவும், FL2 மனமகிழ் மன்றங்களில் விதி மீறல்கள் இருப்பதாகவும், புதிய மனமகிழ் மன்றங்கள் புதுக்கோட்டையில் வரக்கூடாது எனவும் வழக்குத் தொடர்ந்து இருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் எங்களது வழக்கை கோப்பில் எடுத்து மனுவை அனுமதித்து மேற்படி அரசு தரப்பில் பதிலுக்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை அசோக் நகரில் 2024 ஆம் வருடமே உரிமம் இல்லாமல் புதிய மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டது இதை மற்றொரு அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிறுத்தி வைத்திருந்தது.
ஆனால் தற்போது நான் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள போது . முறைகேடாக திறக்கப்பட்ட அசோக் நகர் மனமகிழ் மன்றத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் நடத்துவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி காவல் துறையால் பதற்றம் நிறைந்த பகுதியாக (red zone) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அசோக் நகர் பகுதியில் புதிய மனமகிழ் மன்றம் திறப்பது மேலும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது ஆகும்..
ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சட்டத்துக்கு புறம்பாக பெறப்பட்ட அசோக் நகர் மனமகிழ் மன்றத்தின் உரிமத்தை ரத்து செய்து பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக புதுவையாக மாறப்போகும் புதுகை என்ற பதாகைகளை கையில் ஏந்தி இன்று மனு அளிக்கப்பட்டது…













; ?>)
; ?>)
; ?>)