மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பழைய முறையை அமல்படுத்த கோரி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

சோழவந்தான் நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெஸ்சியிடம் மனு வழங்கினார்கள். இதில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மனுவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பழைய முறையை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது ஏழை விவசாய தொழிலாளர்கள் பெண்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாப்பை வழங்கும் ஒரு நலத்திட்டம் மற்றும் மக்களின் சட்டபூர்வ உரிமையாக கருதப்படுவது இதன் பெயரை மாற்றக்கூடாது. பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.







