மக்களுடன் முதல்வர் முகாம் கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சியில் சார்பில் எழுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமினை உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் உள்ளிட்டோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர்.
வருவாய்த்துறை, நகர்புற வளர்ச்சித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறை, காவல்த்துறை உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ள இந்த முகாமில் எழுமலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.,
கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக எழுமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.,







