• Sat. May 4th, 2024

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

வியாட்நாமை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் நியு ஜியான் டோக் ஹக் (10க்கு 8.5 புள்ளிகள்) பெற்று முதல் பரிசாக முத்துராமலிங்கம் கோப்பை மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்கம் பெற்றார்.

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 20 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் பங்கு பெற்ற சதுங்க போட்டியில் வியாட்நாம் வீரர் கேப்பை வென்றார்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உள்ள காமராஜர் அரங்கத்தில்
கடந்த 23ம் தேதி முன்னாள் உலக சதுரங்க சம்மேளன துணை தலைவர் சுந்தர். தமிழ்நாடு செஸ் சம்மேள தலைவர் மாணிக்கம். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேசசெஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று நிறைவு பெற்றது.

மதுரை சதுரங்க கழக செயலாளர் உமா மகேஸ்வரன் வரவேற்புரை கூறினார் தமிழ்நாடு செஸ் இணைச்செயலாளர் பிரகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதன்மை முதல்வர் சுரேஷ்குமார் முதல்வர் அல்லி மற்றும் சர்வதேச சதுரங்க போட்டி பார்வையாளர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியில் பட்டம் வென்றவர்களுக்கு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி டீன் திருநாவுக்கரசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறும் முத்துராமலிங்கம் சதுரங்க கோப்பைக்கான போட்டிகள் . கடந்த 23ம் தேதி துவங்கி30ம் தேதி வரை நடைபெற்றது.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை செஸ் திருவிழா – என்ற பெயரில்
மூன்றாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் கடந்த 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை ஏ,பி,சி, என மூன்று தரவு பிரிவுகளில் நடை பெறுகிறது. ஏ.பி.சி என மூன்று பிரிவுகளிலும் தலா 10 போட்டிகள் வீதம் 30 போட்டிகள் 8 நாட்கள் நடைபெற்றது.

3வது சர்வதேச போட்டிகளில் உலக அளவில் 20 நாடுகளில் 33 கிராண்ட் மாஸ்டர் வீரர்களும் , இந்திய அளவில் 1700 புள்ளிகள் பெற்ற தரவரிசையில் 1600 பேர் சதுரங்க (செஸ்) போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். மொத்தம் 1640 விரர்கள் பங்க பெற்ற 3வது சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற 49 வீரர்களுக்கு முத்தராமலிங்கம் கோப்பைகள் 3 மற்றும் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகள், 8 ஸ்கூட்டர்கள், 100 சைக்கிள் வழங்கப்பட்டது.
“ஏ” பிரிவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.

.ஏ பிரிவில் முதல் பரிசாக சாம்பியன் விருது பெறுபவருக்கு இருபது லட்சம் ரூபாய், பரிசு கோப்பை உள்பட ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக வியட்நாம் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் நியுஜியான் டோக் ஹக் முத்துராமலிங்கம் கோப்பை மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றார். .இரண்டாவது பரிசாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீ ஹரி பத்துக்கு எட்டு புள்ளிகள் பெற்று முத்துராமலிங்கம் கோப்பை மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றார். மூன்றாவது பரிசாக இந்தியாவைச் சேர்ந்த நிதின் பத்துக்கு எட்டு புள்ளிகள் பெற்று ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் கோப்பையை வென்றார்.

இதேபோல் “பி” பிரிவில் 1700 புள்ளிகள் பெற்று உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு கோப்பை ரூபாய் 50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் “பி” பிரிவு வீரருக்கு 2 லட்சம் ரூபாய் முதல் பரிசும் ஒரு பைக்கும் வழங்கப்பட்டது.

இதே போல் “சி” பிரிவில் 1500 புள்ளிகள் பெற்ற வீரர்கள் பங்கு பெறும் சதுரங்க வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பணமாகவும்,பைக் ஒன்றும் வழங்கப்படுகிறது. தனித்துவமாக விளையாடும் வீரர்களுக்கு என ஐந்து பைக்குகளும் மொத்தம் எட்டு பைக்குகள் மற்றும் 100 சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுகள் தவிர பங்கேற்கும் சதுரங்க வீரர்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் 49 வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *