• Wed. Mar 22nd, 2023

மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், 2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
  • காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
  • அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும். பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
வெளியூரில் வசிப்பவர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல், எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *