• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை..,

முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதைக் கேள்விக்குறியாக்கும் கேரளா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பெரியார் வைகை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு முறை உச்ச நீதிமன்றம் அணை பலமாக உள்ளது என தீர்ப்பு வழங்கியது. ஆனால் பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டுமென கேரளா அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது,

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்திற்கும் தீர்வாக அமையும், புதிய அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசு ஏற்கும், புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளது. 2006 மற்றும் 2014ல் முல்லைப் பெரியாறு அணை குறித்து தெள்ளத்தெளிவான ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அதனால் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அடுத்ததாக பேபி அணையை பலப்படுத்திய பின்பு அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்று அந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இதற்கிடையில் தேவையில்லாமல் கேரள அரசு இப்பொழுது உச்சநீதிமன்றத்தில், அணை எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அணையை உடைக்க வேண்டும், புதிய ஆணை கட்டுவதற்கான மொத்த செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று
ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டிய அவசரம் எங்கிருந்து வந்தது.
இரண்டு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனையால் சண்டை வரக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அரசுகள் அமர்ந்து பேச வேண்டிய விஷயத்தை எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றம் கொண்டு போய்க்கொண்டிருந்தால், 2014இல் நீதியரசர்கள் ஐந்து பேர் கொண்ட குழு அன்னை பலமாக உள்ளது என்று கொடுத்த தீர்ப்பு என்னாவது?

அதே உச்ச நீதிமன்றத்தில் அணை பலவீனமாக உள்ளது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் இது உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கு சமம். எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கை (sou motu case) தாமாக முன்வந்து எடுத்து கேரளாவில் 356 வது சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழகத்தை ஏமாற்றுவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 10 லட்சம் விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறது பினராய் விஜயனின் அரசு. அரசியல் செல்வாக்கு இழந்த பினராய் விஜயனின் அரசு முல்லைப் பெரியாறை கையில் எடுத்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார். அதற்காகத்தான் இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து நாங்கள் கூறுகிறோம், முல்லைப் பெரியாறு அணைக்கு 999 ஆண்டுகள் ஒப்பந்தம் இருக்கிறது, இந்த அணையானது 999 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும், கேரளா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம், தமிழக முதல்வரின் முகத்தில் பூசிய கரியாக நினைக்கிறோம். கேரளா பிரமாண அப்புறம் தாக்கல் செய்ததை கடுமையாக கண்டிக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குறியாக்கும் கேரள அரசை 386 ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, பெரியார் வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ் மனோகரன், முன்னாள் தலைவர் சலேத்து உட்பட பலர் இருந்தனர்.