• Tue. Apr 23rd, 2024

மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ByA.Tamilselvan

Mar 6, 2023

மதுரை கள ஆய்வில் முதலமைச்சர் பேசும் போது மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல அவறின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிக்களுக்கு அறிவுறுத்தல்
மதுரை கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாவது:
தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். _மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். மாவட்டங்களுக்கு ஏற்ப சிறப்பு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும். ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கொடுக்க காத்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *