• Thu. Mar 28th, 2024

ஈரோடு கிழக்கு தொகுதி பெயரை குறிப்பிடாமல் மக்கள் நீதி மய்யம் 23ஆம் தேதி ஆலோசனை கூட்டம்..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வலம் வருகின்றனர்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அண்மையில் ராகுல் காந்தி தனது முதற்கட்ட பாதயாத்திரை முடித்த பொழுது டெல்லி சென்று அவருடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
டெல்லியில் கமல்ஹாசன் ராகுலை சந்தித்திருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடுமா என்பது சந்தேகமே?


காங்கிரஸுக்கு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் 23ம் தேதி சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏதும் குறிப்பிடாமல் வெறுமனே ஆலோசனை கூட்டம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *