தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ, திரும்பப் பெற வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக ஆக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் 12,349 கிலோமீட்டர் சாலையில் 210க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைத்து மக்களிடம் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரிப்பு செய்திட வேண்டுமென பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 முடிய மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. இதன் ஒரு புதிய ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் திருப்பதி, தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
