• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள்

ByKalamegam Viswanathan

Mar 2, 2023

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்து வரி, பெயர் மாற்றம் வேண்டி 15 மனுக்களும்,புதிய சொத்துவரி விதிப்பு வேண்டி 8 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், பாதாள ச்சாக்கடை வசதி வேண்டி 15 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 5 மனுக்களும், சுகாதாரம் வசதி வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 10 மனுக்களும் என, மொத்தம் 62 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில், சொத்து வரி, பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு அனுமதி ஆணையினை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார், உதவி வருவாய் அலுவலர் சித்ரா கண்காணிப்பாளர்கள் செந்தில்குமரன், வீரபாலமுருகன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.