• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

May 10, 2025

காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி திருமதி. ஷாலினி சிங் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதேபோல் இவ்வாரம் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி. எம். வி. என். வி.லட்சுமி சௌஜன்யா ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் .பிரவீன் குமார்உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 12 புகார்கள் பெறப்பட்டன. மேலும் இன்று குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளே அதிகமான புகார்களாக பெறப்பட்டன.

கணவன் மனைவி பிரச்சனை, வீட்டில் பெண் கொடுமை, வரதட்சணை புகார்கள் உள்ளிட்ட புகார்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெண்கள் அளித்தனர். அளிக்கப்பட்ட அனைத்து பெண் சார்ந்த புகார்கள் அனைத்தையும் காரைக்கால் அனைத்து காவல் நிலையத்தில் புகார்களாக பதிவு செய்து, அதனை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிய வேண்டும்.

மேலும் இனி வரக்கூடிய பெண் சார்ந்த புகார்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் மற்றும் விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி மகளிர் காவலர்களுக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி. லட்சுமி சௌஜன்யா ஐபிஎஸ் அவர்கள் அறிவுறுத்தினார்.