மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேஎரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் உசிலம்பட்டி செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் எறவார்பட்டி பானா மூப்பம்பட்டி அரசமரத்துப்பட்டி தெப்பத்துப்பட்டி மணல் பட்டி ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் புதிய டாஸ்மாக் கடை கிராமப் பகுதியில் அமைக்க கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி இன்று 12 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என கூறி இடத்தையும் தேர்வு செய்து அறிவித்திருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தகிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கடை முன்பு இன்று காலை 11 மணி அளவில் கூடினர் டாஸ்மாக் கடை எங்களுக்கு வேண்டாம் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பெண்கள் உட்பட முன்னுருக்கும் மேற்பட்டோர் கடை முன்பு உசிலம்பட்டி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தைக்கு வந்த காவல் ஆய்வாளர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்படாத பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் கூறுகையில் கடை அமைப்பதற்கு அரசு முடிவு செய்துவிட்டது எங்களால் தடுக்க முடியாது. ஆகையால் கிராமத்தினர் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று கடைக்கு தடைபெற்று வந்தால் கடை திறக்க மாட்டோம் என கூறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் கடையை திறக்க கூடாது என பொதுமக்கள் காவல்துறையினுருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கடை முன்பு 300க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக நின்று கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.