• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகள் இன்றி மதுரை அவனியாபுரம் பகுதி மக்கள் அவதி

ByA.Tamilselvan

Apr 28, 2022

மதுரை அவனியாபுரம் அருஞ்சுனைநகர் 100வது வார்டு விரிவாக்கம் பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகோள்.
எங்கள் பகுதியில் பாதாளசாக்கடை வசதி, ரோடு வசதி,நல்லதண்ணீர் வசதி,தெருவிளக்கு வசதி,குப்பை நீக்கல் என அடிப்படை வசதிகள் தீர்வு காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது .இப்பகுதி எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பாவிடம் முறையிட்டதில் கருவேல் முள்கள் அகற்றம் மற்றும் எரியாத தெரு விளக்கு வசதி செய்து கொடுத்தார்கள் நன்றி. தற்போதைய கவுன்சிலரிடம் மேலும் சில வசதிசெய்துதர பரிந்துரை செய்ய கூறியுள்ளோம். ஆனால் பல இடங்களில் கருவேல்முள்கள் மண்டிகிடப்பதால் ஜேசிபி வைத்து அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் பாம்பு அதிகம் வருகிறது,பள்ளி குழந்தைகள் தண்ணீருக்குள் விழுந்து அடி படுகிறார்கள்,ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது.இதனால் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படுகிறது. உடன் ரோடு வசதி செய்ய வேண்டும் அவனியாபுரம் விரிவாக்கம் பகுதி நுழைவு பகுதியில் ஆட்டோ சரிபார்க்கும் கடை அருகில் பாதாள சாக்கடை (தூர்வாரப்பட்டு) தோண்டப்பட்டு மூடாமல் இருக்கிறது.மேலும் 100 வது வார்ட் விரிவாக்க பகுதிக்குள் பாதாளசாக்கடை ஏற்படுத்தாமல் உள்ளது உடன் நிறைவேற்ற வேண்டும்.

ஓம்சக்தி நகர் போன்ற பல பகுதிகளில் தெருவிளக்கு போஸ்ட் மட்டும் உள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட விரும்பத்தாகத செயல்கள் நடக்கிறது. எனவே லைட் வசதி வரும் வரை தற்காலிகமாக அனைத்து பகுதிகளிலும் போக்கஸ் லைட் மாட்ட வேண்டும். குப்பைகளை வாங்கும் பேட்டரி வண்டி மூன்று நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. அப்படியே வந்தாலும் பல தெருக்களுக்கு செல்வதில்லை கூட்டுவதும் இல்லை இதனால் குப்பைகளை ஆங்காங்கே கொட்டும் நிலை தொடர்கிறது. அதிகாரிகள்,கவுன்சிலர் சிறப்பு நிதி ஒதுக்கியும் எம்.எல்.ஏ.நிதியிலிருந்தும் அடிப்படை வசதிகளை செய்து தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.