கனடாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கனடாவில் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா நாட்டில் கோடை வெப்பம் காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனை காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.