
காரைக்குடியில் குடிநீர் குழாய் சேதமடைந்து நீர் வீணாகி வருவதால் அதனை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வ உ சி சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு
விநியோகம் செய்யக்கூடிய குடிநீர் குழாய் சேதமடைந்து, நீர் வீணாகி கழிவு நீர் வாய்க்காலில் கலந்து வருகிறது. இதனால் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலையில், இதனை சீரமைக்க பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து,நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது,
குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
