தேவையானவை:
சாதம் – 2கப், வறுத்த வேர்க்கடலை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடித்தது – 1கப், நறுக்கிய பச்சைமிளகாய் (அ) மிளகாய் வற்றல்-6,
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கிய மிளகாய்களை போட்டு வதக்க வேண்டும். பின்னர் பொடித்த வேர்க்கடலையை சேர்த்து வதக்கி சூடான சாத்தில் போட்டு கிளறி விட்டால் வேர்க்கடலை சாதம் ரெடி. இந்த சாதத்திருக்கு தொட்டு கொள்ள மல்லிச்செடி அல்லது புதினா துவையல் சூப்பராக இருக்கும்.
வேர்க்கடலை சாதம்
