• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பதான் திரைப்பட விவகாரம்- பொங்கி எழுந்த ஷாருக்கான் ரசிகர்கள்

நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் 2023ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியான போது, அதில் தீபிகா படுகோன் கவர்ச்சியான காவி நிற பிகினி உடை அணிந்து ஷாருக்கானுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இதற்கு பாஜக கட்சி உட்பட, சில அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் ஆன்மீகவாதிகள்என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இவர்களில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரியும் ஒருவர்.ஆனால் தற்போது இவருடைய மகள் மல்லிகா அக்னிகோதிரி, காவி நிறத்திலான பிகினி உடை ஒன்றை அணிந்து, கடற்கரையில் ஒய்யாரமாகபடுத்திருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள், பொங்கி எழுந்து ஷாருக்கான் தீபிகா படுகோன் காவிநிற பிகினி உடை அணியக்கூடாது… ஆனால், உங்கள் மகள் மட்டும் காவிநிற பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கலாமா? என திட்டி திட்டி தீர்த்து வருகிறார்கள்.இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் அக்கவுண்ட்டாக மாற்றினார். எனினும் இவர் பதிவிட்ட போது ஷாருக்கான் ரசிகர்கள், ஸ்னாப் ஷாட் எடுத்த புகைப்படங்களை தற்போது வைரலாக்கி இயக்குனர் விவேக் அக்னிகோத்திரியை வெளுத்து வாங்கி வருகின்றனர்