• Sat. Feb 15th, 2025

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி!

By

Aug 27, 2021 , ,

பேரறிவாளனுக்கு 3வது முறையாக மேலும் ஒருமாதம் பரோலை நீட்டித்தது தமிழ்நாடு அரசு..!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரறிவாளனுக்கு இன்றுடன் பரோல் முடியும் நிலையில் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவுக்கு சிக்கிச்சை பெற்று வருவதாக பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக பரோல் விடுப்பில் உள்ளார். பரோலில் இருக்கும் பேரறிவாளன், சில நாட்களுக்கு முன்னதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மேலும், ஜாமின் கோரிய தனது வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதை தொடரந்து கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.