• Sat. Apr 27th, 2024

வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளி..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். அதே போல், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும். பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர். வகுப்பறைகளிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம். பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *