மதுரை மாவட்டம் ம.கல்லுப்பட்டி கிராம பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தராதே கண்டித்து, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் இணைப்பு சாலையான மள்ளப்புரம் ஊராட்சி உசிலம்பட்டி, மயிலாடும்பாறை முத்தாலம்பறை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் விவசாயிகள் பஸ் வசதி வேணிடிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம் கல்லுப்பட்டி கிராம பொது மக்கள் சார்பில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இந்திரா காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தங்கமணி, வழக்கறிஞர் அன்புமணிகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்30 ஆண்டு காலமாக நீண்ட நாள் கோரிக்கையான மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் இணைப்பு சாலையான மள்ளப்புரம் வழியாக மயிலாடும்பாறை சாலை கடமலைகுண்டு, வருசநாடு, முத்தாலம்பாறை ஊராட்சி,
மூலக்கடை ஊராட்சி, மந்திசூலை ஊாட்சி உப்புத்துறை, கருப்பபையாபுரம்,
வண்ணாத்திபாறை, அருகவலி மற்றும் தேனி மாவட்டம் தாழையூத்து, மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடி தண்ணீர்வசதி சாலை வசதி, போக்குவரத்து வசதி,
மின்சாரவசதி இன்றி மலைவாழ் மக்களும் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
பஸ் வசதி இல்லை, வசதி இருந்தால் வாழ்வாதாரம் உயரும். மயிலாடும்பாறை, வருசநாடு முதல் மள்ளப்புரம், ம.கல்லுப்பட்டி வழியாக உசிலம்பட்டி மதுரை செல்வதற்கு பஸ்வசதி விவசாய பொருட்களான காய்கறி மற்றும் பள்ளி மாணவர்களை படிக்க செய்வதற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பஸ் வசதி செய்து தருவதற்கு உண்ணவிரதம் போன்ற பலபோராட்டங்கள் செய்திருந்தும், இது வரை எங்கள் மாவட்டத்திற்கு எந்த அதிகாரியும் வந்து பார்வையிட வில்லை ஆகையா வருகிற தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை அவ்வூர் கிராமமக்களின் சார்பாக அனைவரும் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக மனு அளித்தனர்.