மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,போக்குவரத்துத் துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர்ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, உட்பட பலர் உள்ளனர்.