நவராத்திரி திருவிழா 10_ நாட்கள் கடும் தவம் புரிந்த பகவதியம்மன் பரிவேட்டைக்கான புறப்பாடு பூஜைகள் மதியம் தொடங்கி நிறைவு பூஜை மாலை நிறைவு பெறும்.
கன்னியாகுமரியிலிருந்து 3_கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாதானபுரம் பகுதியில் பரி வேட்டைக்கு புறப்பட்ட நிகழ்வில் வெள்ளி குதிரையில் அமர்ந்து புறப்பட்ட வாகனத்தின் முன் குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், வாழ்யை ஏந்தி முன் நடந்தார். இந்த நிகழ்வில் தொடக்க நிகழ்வாக அய்தீகம் முறைபடி துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
கடுமையான தவம் புரிந்த அன்னையின் திரு மேனி கதகதப்பு தன்மையில் இருக்கும் என்பதால் சூட்டை தணிக்கும் இருமிச்சம் பழம் மாலை அணிந்து எழுந்தருளிய நிலையில் வழி நெடுக பக்தர்கள் அன்னை பகவதிக்கு எலுமிச்சம் பழத்தால் ஆன மாலையை அணிவித்தனர்.
பரி வேட்டையின் வரலாற்று பின்னணி.. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கோவில் பிரவேசம் மறுக்கப்பட்ட மக்கள், ஆண்டுக்கு ஒரு முறை மக்களவை நோக்கி அம்மன் சென்று பரிவேட்டையை முடித்து வெற்றியுடன் மீண்டும் இருப்பிடம் திரும்புவதும், அம்மனின் பரி வேட்டை பவனியின் போது தான் ஆலையபிரேவசம் மறுக்கப்பட்டுள்ள மக்கள் அன்னை பகவதியை வணங்கி,வழிபடுகை செய்வதற்கான சூழலுக்காவும் பரி வேட்டை நிகழ்வு அமைந்திருந்தாக முன்தினம் வரலாறு சொல்லும் செய்தி.
கடந்த காலங்களில் கோவில் திருவிழா என்றால் யானைக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது வனத்துறை மற்றும் அரசும் யானை குறித்து கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால். தமிழகத்தில் கோவில் விழாக்களில் யானை என்பது ஒரு பழைய நிகழ்வாகி போனதால், நவராத்திரி திருவிழாவுக்கு யானை வேண்டும் என போராட்டம் நடத்திய பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கை, போராட்டம் எல்லாம் தோல்வி அடைந்த நிலையில், அம்மனின் பரி வேட்டை ஊர்வலம் வரும் பாதையான விவேகானந்த புரம் சந்திப்பில் யானையின் கட்டவுட்டை சாலையில் வைத்து விட்டு போராட்டக்காரர்கள் சென்றுவிட்டார்.
ஊர்வலம் விவேகானந்த புரம் சந்திப்பு வருவதற்கு முன்பே. காவல் துறையினர் யானையின் கட்டவுட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். அந்தி மாலை முடிந்து முன் இரவு தொடங்கும் நேரத்தில் மகாதானபுரம் பரி வேட்டை பகுதிக்கு வந்து அன்னை பகவதி நடத்திய போரில் வெற்றி பெற்று சினம் தணிந்தார்.
இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வணங்கிய நிகழ்வில் குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.