• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாப்பம்மாள்புரம் அருள்மிகு ஸ்ரீபகவதியம்மன் கோயில் நவராத்திரி விஜயதசமி விழா.

ByA.Tamilselvan

Oct 6, 2022

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள் புரத்தில் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பகவதி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், உற்சவருக்கு யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தினந்தோறும் நடைபெற்றது .இன்று நிறைவு நாளை முன்னிட்டு காலை9.00 மணியளவில் மகிஷாசுர வதம் செய்விக்கப்பட்டு, பின் துர்க்கா திரிசதி ஹோமம் செய்யப்ட்டு, அம்பாளுக்கு சாந்தி பூஜை நடைபெற்றது. புதிதாக பள்ளி செல்ல இருக்கிற குழந்தைகளுக்கு வித்யாஆரம்பம் செய்யப்பட்டு, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கப்பட்டது. நவராத்திரி விஜயதசமி விழாவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் வெங்கடேஷ், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ஜெகநாதன் உள்பட விழா கமிட்டியாரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.