சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியுடன்,ஓம் சக்தி- பராசக்தி எனும் சரண கோஷத்தோடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கீழரதவீதியிலுள்ள கடைக் கோவிலிலிருந்து சிம்மவாகனத்தில் சர்வ அலங்காரத்தோடு ரதத்தின் மேல் எழுந்தருளி கிளம்பிய மாரியம்மன், விநாயகர் ரதம் முன்னே செல்ல, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மாரியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.

மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றிலும் வண்ண- வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, திரளான பக்தர்களின் குலவை ஒலியோடு, ஓம்சக்தி!- பராசக்தி!! என்ற சரண கோஷத்துடன் கொடியேற்றத்தோடு முதலாம் நாள் திருவிழா தொடங்கி நடைபெற்றது. பங்குனி பொங்கல் திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அன்றாடம் பக்தர்கள் அக்னி சட்டிஎடுத்து, கயர்குத்தி, முடி காணிக்கையுடன், முத்துகாணிக்கையும் செலுத்தி, மாவிளக்கெடுத்து, தவழும் பிள்ளை போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை கையிலேந்திசுமந்து அம்மனுக்கு செலுத்தி, மாரியம்மனின்அருள் கூட்டும் செயல்கள் பல புரிந்து வருகின்றனர்.

திருவிழா நடைபெற்று வரும் காலங்களில் தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் கள் உபயமளிக்க, அன்றாடம் மாரியம்மன் வெள்ளி ஊஞ்சலிலும், சிம்மம், காமதேனு,கைலாச ப ர்வதம், வேதாளம், வெள்ளிரிஷபம், யானை, குதிரை, அன்னம் போன்ற வாகனங்களிலும், புஷ்பபல்லக்கிலும் சர்வ அலங்காரத்தோடு ரதத்தில் எழுந்தருளி, காலை மற்றும் இரவு வேளைகளில் முக்கிய சாலை களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாக்களின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8-ம் நாளன்று பொங்கல்விழாவும், மறுதினம் 7-ம் தேதி திங்கட்கிழமை9-ம் நாளன்று கயர் குத்து திருவிழாவும்,9-ம் தேதி புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.