



சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி தொடங்கப்பட்டு 25 வது வெள்ளி விழாவை முன்னிட்டு உடற் கல்வித்துறை சார்பில் குறுகிய தூர மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ரயோலா பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காளீஸ்வரி கல்லூரி மைதானம் வரையிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பிரிவினருக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் செங்கமல நாச்சியார்புரம் விளையாட்டு மைதானத்தில் இருந்து கல்லூரி வரை பொது பிரிவினருக்கும் 7 கிலோமீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்,விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், கல்லூரியின் முதல்வர் பாலமுருகன், கல்லூரியின் துணைத் தலைவர முத்துலட்சுமி, ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் இயக்குனர் ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஓட்டப்பந்தயத்தில் 1500 பேர் பங்கு கொண்டனர். சிறுவர் பிரிவில் கௌசிகா என்பவர் முதலிடத்தையும் ,யாஸ்மிகா என்பவர் இரண்டாம் இடத்தையும், கனகலட்சுமி என்பவர் மூன்றாம் இடத்தையும், மகாலட்சுமி நான்காம் இடத்தையும்,நிவேதா என்பவர் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர். சிறுவர் பிரிவில் லோகநாதன் என்பவர் முதலிடம்
கருத்த பாண்டியன் இரண்டாம் இடத்தையும், தமிழ்ச்செல்வன் மூன்றாம் இடத்தையும், பெற்றனர்.
பொது பிரிவில் 600 பேர் பங்கு எடுத்துக் கொண்டனர். அதில் மகளிர் பிரிவில் பிரியதர்ஷினி என்பவர் முதலிடத்தையும், வினிதா என்பவர் இரண்டாம் இடத்தையும் ,ஜான்சி என்பவர் மூன்றாம் இடத்தையும், பிடித்தனர். ஆடவர் பிரிவில் மாரி சரத் என்பவர் முதலிடத்தையும், சுகுமார் என்பவர் இரண்டாம் இடத்திலும், அலெக்ஸ் என்பவர் மூன்றாம் இடத்தையும், பிடித்தனர்.

முதல் இடத்தை பெற்றவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமும் ,இரண்டாம் இடத்தை பெற்றவர்களுக்கு ரூபாய் 4000, மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு 3000மும், நான்காம் இடம் பெற்றவர்களுக்கு ரூபாய் 2000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது .வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுத் தொகையும் சான்றிதழ்களையும் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி இயக்குனர் ராஜேஷ் வழங்கினார். கல்லூரியின் உடற்கல்விதுறை இயக்குனர் யோகேஸ்வரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண்கானித்தார் .உடற்கல்வித்துறை பயிற்றுநர் சுதாகர் நன்றி கூறினார்.

