சி.பா ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலையிலன் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவதில் இருந்தே தெரிகிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது, அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் 50% நிறைவேற்றியதா?. சிறு குழந்தைகளின் ஆசை தோசை, அப்பள, வடை விளையாட்டு போல தான் அவர்களின் கருத்து உள்ளது. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத என்பதை பட்டியலிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுமட்டுமின்றி தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர். மக்கள் பிரச்சனைகளை எங்களுடையே வாசலுக்கே வந்து தெரிவிக்கலாம் என கூறினர். ஆனால் இன்று புகார் தெரிவிக்க வருபவர்கள் தீக்குளிக்கும் நிலையிலேயே உள்ளது. இதுதான் திமுக ஆட்சியின் ஆட்சியின் அவல நிலை என்று ஜெயக்குமார் கூறினார்.
செய்தியாளர் : கிஷோர்