• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

உலகளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் – உதவி கோரி ஆட்சியரிடம் மனு.

Byகிஷோர்

Sep 27, 2021

விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரை சேர்ந்த கல்லுரி மாணவர்கள் ஹரிஷ்பாண்டி,ராகுல்,திக்சித்தா இவர்கள் சிறுவயதிலிருந்தே சிலம்பத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சிலம்பம் கற்று பல்வேறு போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

நேஷனல் அளவில் தனியார் அமைப்பால் கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் தகுதி பெற்று பஞ்சாப்பில் கடந்த வாரம் நடைபெற்ற இன்டர்நேஷனல் அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன் மூலம் வரும் நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ள சிலம்பப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோவாவில் நடைபெற உள்ள போட்டியில் பங்குபெற நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இவர்களால் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கோவாவில் நடைபெற உள்ள சிலம்பப் போட்டியில் பங்கெடுக்க உதவ வேண்டும் எனக்கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் சிலம்ப வீரர்கள் மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர்