

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆர்ச் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

மாவட்டத் தலைவர் பாக்கிராஜ் தலைமையில் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அரசு அலுவலகங்களில் ஊராட்சி செயலர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர்களுக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களையும் எழுப்பினர்.

