• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பள்ளிபாளையம் நகராட்சி தி. மு க தலைவரை மாற்றக்கோரி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…!

திமுக நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு பகுதியில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் சொல்லி எந்த வேலையும் நடப்பதில்லை, எங்கள் வார்டு பகுதிகளில் நீங்கள் அதிகாரிகளுடன் வந்து மக்கள் பிரச்சினைகளைப் கேட்பதால் மக்கள் மத்தியில் எங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகவும் மேலும் தாங்கள் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர் அப்போது திமுக நகர மன்ற தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தலைவர் பாதியில் கூட்டத்தை ரத்து செய்து திடீரென வெளியேறினார் அதனைத் தொடர்ந்து துணை தலைவர் மற்றும் கமிஷனர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.

அதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் திமுக நகர மன்ற தலைவர் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும், தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும் என கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.