பள்ளிபாளையத்தில் நகர்மன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செந்தில், 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்….
பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகர் மன்ற உறுப்பினர்களாக 7 அதிமுக , 13 திமுக, 1 மதிமுக உறுப்பினர்கள் உள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்றத்தில், இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை என, அவர்களது வார்டுகளில் அத்தியாவசிய பணிகள் செய்வதில்லை எனவும், நகர மன்ற தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி அதிமுக உறுப்பினர்கள் 7 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக. அதிமுக 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் செந்தில் கூறும்போது..,
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் குறைகளை கூற 5 நிமிடம் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என நகர மன்ற தலைவர் கூறியதால், அதிமுகவினர் மக்கள் குறைகளை பேச நேர கட்டுப்பாடு தேவை இல்லை எனக் கூறியதை அடுத்து அதற்கு அனுபவிப்பீர்கள் என பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் கூறியதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் அதிமுகவினரின் 7 வார்டுகளில் முறையான நகராட்சியின் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதில்லை எனவும், அதிமுக கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் திமுகவினரையே வைத்து வார்டு நகராட்சி தரப்பில் உள்ள வேலைகளை செய்து முடிப்பதாகவும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நகராட்சி ஆணையாளர் தாமரை அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லாததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் நகர்மன்ற கூடத்தில் ஏழு நகர மன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள். அனுபவிப்பீர்கள் என்று கூறியதற்கும், பணிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் உரிய விளக்கம் வேண்டும் எனவும் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
