• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!

Byவிஷா

Feb 7, 2023

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மருத்துவமனை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக, ஞீஆளு என்கிற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆந்திராவை சேர்ந்த இந்த தனியார் நிறுவனம் சார்பில் பழனி அரசு மருத்துவமனை பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், எலக்ட்ரிசியன் மற்றும் பிளம்பர் பணிகளுக்காக தினக்கூலி அடிப்படையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு 549 ரூபாய் வழங்கவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் மட்டுமே தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அனைவரும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.