பீஸ்ட் படம் பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ஃபஸ்ர்ட் லுக் துவங்கி, செகண்ட் சிங்கிள் வரை அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளதால், படமும் முதல் நாளே புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடிக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
பீஸ்ட் படத்தின் ஃபஸ்ர்ட் டே ஃபஸ்ர்ட் ஷோ இந்தியாவில் ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரா ஏஜன்டாக நடித்துள்ள விஜய்யின் கேரக்டர் பெயர் வீர ராகவன் என்பதையும் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கொண்டாட்டத்தை பல மடங்கு எகிற வைக்கும் வகையில், மாலை 6 மணிக்கு பீஸ்ட் டிரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது!
தெறிக்கவிடும் மாஸ் அளவில் உள்ளது “பீஸ்ட்” ட்ரைலர்! ட்ரைலரில் செல்வராகவன் காட்சிகளை விளக்குவதுபோல் அமைந்துள்ளது! சண்டை காட்சிகளில், பைக், கார் தாண்டி விமான சன்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது வேற லெவல்! பட ட்ரைலரை வைத்து, விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது!