• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

விபத்தில் காயம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

தூத்துக்குடி அருகே பனை மரத்திலிருந்து தவறிவிழுந்து காயம் அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தடிகாரமுத்து மகன் பொன்முத்து (26), பனையேறும் தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பனை மரம்…

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை: 3பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர், மாசார்பட்டி ஆகிய 2 காவல் நிலைய போலீசார் நேற்று (16.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை…

கோவில்பட்டியில் கரோனா தடுப்பூசி திருவிழா

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி திருவிழாவில் 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கரோனா பரவுதலை தடுக்கும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில்…

முன்விரோதத்தில் மோதல்: அண்ணன், தம்பி உள்ளிட்ட 8பேர் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் அண்ணன், தம்பி  உள்ளிட்ட 8பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி மகன் பேச்சிமுத்து (41) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சேர்மத்துரை (43)…

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி!..

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “ஈரமாவு மற்றும் ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பு” குறித்து மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும்…

தூர்நாற்றம் வீசும் தூத்துக்குடி: மாநகராட்சி அலட்சியம் – நோய் பரவும் அபாயம்!!..

தூத்துக்குடியில் துர்நாற்றம் வீசும் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலையாக விளங்கும் தமிழ் சாலையில் குரூஸ் பர்னாந்து சிலை அருகே வட்ட தெப்பம் உள்ளது.  இந்த…

விபத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு எஸ்பி அஞ்சலி..

தூத்துக்குடியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் கனகவேல் உடலுக்கு இன்று மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வ்நத காவலர் கனகவேல் (26), அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில்…

இளம்பெண் தற்கொலை : உதவி ஆட்சியர் விசாரணை!..

தூத்துக்குடியில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததது தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள திருவனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சரண்யா (22). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இந்நிலையில்…

தூத்துக்குடியில் அக்காள்-தங்கையிடம் 12 பவுன் செயின்கள் பறிப்பு: நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை!

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காள்-தங்கையிடம் 12 பவுன் செயின்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி ஜெபசெல்வி (30), சென்னை ஆற்காடு…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடங்கியுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்றால் பல குடும்பங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை…