எரிவதில் தீபம் அழகானது
சுடுவதில் சூரியன் அழகானது
சுற்றுவதில் புவி அழகானது
வளர்வதில் பிறை அழகானது
மின்னுவதில் விண்மீன் அழகானது
தவழ்வதில் குழந்தை அழகானது
குதிப்பதில் கடல் நீர் அழகானது
உறைவதில் பனி அழகானது
விளைவதில் பயிர்கள் அழகானது
தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது
குளிர்ச்சியில் தென்றல் அழகானது
உழைப்பதில் வியர்வை அழகானது
பாடுவதில் குயில் அழகானது
பறப்பதில் புறா அழகானது
கலைகளில் அறுபத்து நான்கும் அழகானது
உறவினில் நட்பு அழகானது
மலர் வாசனையில் மல்லிகை அழகானது
மொழிகளில் அழகானது மழலை
மலர்களில் ரோஜா அழகானது
கலர்களில் கருப்பே அழகானது
கலாச்சாரத்தில் நம் நாடே அழகானது
இத்தனைக்கும் இதற்கு மேலேயும்
எப்போதும் தாய்மை அழகானது
இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது
இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்
குறை ஒன்றும் இல்லையே
அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.