அன்பு பொய்யாவதில்லை
தவறுகளை அடுத்தவர் மீது சுமத்தும் வரை இனிமையாகத் தான் இருக்கும்.
தன் மீது வரும் போது தான் கசக்கும்.
மனிதன் மிகவும் சுயநலமானவன்
நேசித்தால் பிழைகளை பார்க்க மாட்டான்.
வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்.
கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.
அன்பும், உதவியும் ஒருபோதும் அனாதையில்லை,
எங்கோ, எவரோ யாரோ, யாருக்கோ, எதையும் எதிர்பார்க்காமல் அள்ளிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அன்பு ஒரு சிறந்த பரிசு, அதை பெற்றாலும், கொடுத்தாலும் மகிழ்ச்சியே.
அன்பு ஒருபோதும் பொய்யாவதில்லை. அதை கையாளும் மனிதர்கள் தான் பொய்யாகிப் போகின்றார்கள்.
ஆதலால் அன்பும், பாசமும் கிடைக்கும் பொழுது அவற்றை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
உங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
ஒருநாளும் நியாயப்படுத்திக் கொள்ளப் பழகாதீர்கள்.
பறப்பதற்கு சிறகுகள் வேண்டுமென்பதில்லை
சிந்தனை கூட சிறகு தான்..
நாமாக முறித்துக் கொள்ளாத வரை..
கண்ணிற்கு அருகில் ஆள்காட்டி விரலை வைத்துப் பார்த்தால்
அது பெரிதாகவும், மற்ற அனைத்தையும் மறைப்பதாகவும் தெரியும்..
அதையே சற்றுத் தள்ளிப் பிடித்துப் பார்த்திட உண்மை என்னவென்று புரியும் ..
அது மிகச் சிறியது என்றும் தெரியும்..
தன்முனைப்பு கூட அப்படித் தானோ.
தன் பிழை என்றறிந்து
தன்முனைப்பு விடும் போது
உண்மைகள் விளங்கும்..
உறவுகள் மலரும்.
ஆள்காட்டி விரல் மட்டும் அல்ல..
மொத்தக் கைகளிலும்
நாம் கொண்டு போவது எதுவுமல்ல.
மனிதனாய் இருப்பதற்கு மன்னிப்பதும்
மன்னிப்புக் கேட்பதும்.. குற்றமல்ல.
உன் சொல் செல்லாத இடத்தில்
தன் சொல் வெல்லும் என்று
போராடுவது முட்டாள்தனமானது