

பொன்மொழிகள்
1. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!”
2. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.”
3. “நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!”
4. “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை.. நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!”
5. “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!”
6. “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை கண்டு பதறாமல்.. அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும்.. நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என புரிந்து முன்னேறுவோம்.!”
