தத்துவங்கள்
உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டு கொள்வது தான்
வளர்ச்சியின் அடையாளம்.
நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்
ஒவ்வொரு கண்ணும் தங்களையே
பார்ப்பதாக எண்ணுவார்கள்.
எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..
ஆனால் சிலரிடம் மட்டும்
பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்
தெரிந்து கொள்.. ஆனால்
உன் கருத்தைக் கூறிவிடாதே.
நேரத்தை தள்ளிப் போடாதே.
தாமதித்தால் அபாயமான
முடிவு ஏற்படும்.
பிடிவாதமுள்ளவன்
நஷ்டத்திற்கு அதிபதி.
உங்களை தவிர வேறு எந்த
மனிதரையும் கண்டு
நீங்கள் எச்சரிக்கையாக
இருக்க தேவையில்லை.
நண்பனிடம் கடன் வாங்குபவர்கள்
நட்பை விற்று விடுகிறார்கள்.
தண்ணீரில் ஏற்படும் அலைகள்
பெரிதாகி கடைசியில்
மறைந்து விடும். அதுபோல
புகழ் பெருகி கடைசியில்
ஒன்றுமில்லாமல்
மறைந்து விடும்.