

பொன்மொழி
பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்பவனை விட, தன் சொந்த உழைப்பில் வாழ்பவனே சிறந்தவன்.

