
பொன்மொழி
அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.
மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
திருமணமான பெண்ணை கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும்.. அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
