பொன்மொழிகள்
உங்களின் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெற்றி கொள்ள உங்கள் ஆசைகளை விட்டு விடுங்கள்.
வாழ்வில் நேர்மையை பின்பற்றினால் கால்கள் சரியான பாதையில் நடக்க தொடக்கி விடும்.
புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.
அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.
மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதை நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
பயம், சந்தேகம், சோம்பல்.. ஆகிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
திருமணமான பெண்ணை கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும்.. அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை.. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.
துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.