• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 14, 2022

சிந்தனைத்துளிகள்

ஒரு நாள் குளிர்மிகுந்த இரவில், ஒரு கோடீஸ்வரர் ஒரு வயதான ஏழையை வெளியில் சந்தித்தார். அவர் அவரிடம், "வெளியில் இவ்வளவு  குளிர்ச்சியாக இருக்கிறதே, நீங்கள் ஏன் ஒரு கோட் கூட அணியவில்லை!"
 முதியவர் சொன்னார், "என்னிடம் கோட் இல்லை, ஆனால் எனக்கு அது பழக்கமாகிவிட்டது என்று. உடனே கோடீஸ்வரர் "எனக்காக காத்திருங்கள். நான் வீட்டிற்குச் சென்று உனக்கு ஒரு கோட் எடுத்து வருகிறேன் என்றார்."
ஏழை மிகவும் மகிழ்ச்சியடைந்தான், உங்களுக்காக காத்திருப்பேன் என்றான். கோடீஸ்வரர் தனது வீட்டிற்குச் சென்று வேலை மிகுதியால் அந்த ஏழையை மறந்துவிட்டார். 
மறுநாள் காலையில், அவர் ஏழை முதியவர் நினைவு வந்து, அவரைக் கண்டுபிடிக்க வெளியே சென்றார், ஆனால் அவர் குளிரால் இறந்துவிட்டார்.
அந்த ஏழை முதியவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்,
"என்னிடம் கதகதப்பான ஆடைகள் இல்லாதபோது, குளிர்ச்சியை எதிர்த்துப் போராடும் மன வலிமை எனக்கு இருந்தது, ஆனால் நீங்கள் எனக்கு உதவுவதாக உறுதியளித்தபோது, உங்கள் வாக்குறுதியை நம்பி என் மனவலிமையை இழந்து விட்டேன்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டால் எதையும் உறுதியளிக்காதீர்கள். இது உங்களுக்கு அவசியமில்லாமல் இருக்கலாம், ஆனால் அது வேறொருவருக்கு எல்லாமாக இருக்கலாம்.